' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

Thaaipaalum Thanneerum தாய்ப்பாலும் தண்ணீரும் பாடல்

 

Thaaipaalum Thanneerum தாய்ப்பாலும் தண்ணீரும் பாடல்


 தாய்ப்பாலும் தண்ணீரும்
ஒன்னாதான் இருந்துச்சு
விலை இல்லாம கெடந்துச்சு
ஆனா இப்ப  எல்லாமே
தலைகீழா போனுச்சு
தடம் மாறி நின்னுச்சு

நிலாவுல தண்ணீரு
இருக்கானு தேடுறோம்.
ராக்கெட்டை ஏவுறோம்
குடிநீரை பூமியில
வியாபாரம் பண்ணுறோம்.

ஆறிருக்கும் பக்கத்துல
ஊரு உருவாகுச்சு
வரலாறு சொல்லுச்சு
ஊரு மட்டும் இருக்குதய்யா
ஆற மட்டும் காணல.
போன இடம் தெரியல.

 பறவை நட்ட காடுகளை பாவிசனம் அளிக்குதே
நன்றிமறந்து சிரிக்குதே ஆறறிவை வச்சிக்கிட்டு
ஆணவத்தில் வாழுதே

மண்ணைப்போல தண்ணிக்கும் எல்லைக் கோட்டை போடுற‌
வறுமைக்கோட்டை வளர்க்கிற‌
இயற்கையத்தான் பூட்டிவச்சு பொம்மையாக்கப் பாக்கிற‌
அடிமையாக்க நினைக்கிற‌
 

இப்படியே போனாக்கா பூச்சி இங்க வாழுண்டா
புழுவும் இங்க வாழுண்டா
மனிசபய இனம் மட்டும் மண்ணாகிப் போகுண்டா.

 

 

 

 

 

2 கருத்துகள்: