' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஈழம் சினிமா eelamcinema ஈழத்திரை

 

Webinar logo

 

வணக்கம்,


01.11.2021 அன்று  ஈழம் சினிமா - புதிய அலைக்கான வழிவரைபட முன்வைப்பு: அறிமுகமும் கலந்துரையாடலும் நடைபெற்றது. அந்நிகழ்வில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின்போது வாக்களித்தவர்களில் 90% வீதத்திற்கும் அதிகமானவர்களின் கருத்திற்கமைய இவ் வழிவரைபட முன்வைப்பை மேலும் பலருக்குத் தெரியப்படுத்துவதுடன்,  நிகழ்நிலைத் திரைத் தளத்தை(OTT) அறிமுகம் செய்து அது தொடர்பான கலந்துரையாடலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(07.11.2021) நடாத்தத் திட்டமிட்டுள்ளோம்.


இந் நிகழ்வு தொடர்பான தகவல்களை மேலும் பலருக்குத் தெரியப்படுத்துவதுடன், அவர்களையும்  நிகழ்விற்கு அழைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் கலந்துகொள்வதற்கான Zoom இணைப்பு மற்றும் தகவல்கள்:


You are invited to a Zoom webinar.


When: Nov 7, 2021 (Sunday)

7.00 AM Toronto

11.00 AM United Kingdom 

12.00 PM Central Europe 

10.00 PM Australia 

4.30 PM Eelam, Tamil Nadu


Topic: ஈழம் சினிமா விநியோகக் கட்டமைப்பு, அதன் தேவையும் அவசியமும்: நிகழ்நிலைத் திரைத் தளம்(OTT) அறிமுகமும் கலந்துரையாடலும்.


Please click the link below to join the webinar:

https://us02web.zoom.us/j/89751182881?pwd=eFMydEg3K0VvWFFGdFlJZUtCNUxydz09



Zoom ID: 897 5118 2881

Passcode: Eplay


ஈழத்தில் தமிழ்த் திரைப்பட முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு எழுபது ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும், இன்றளவிலும் குடிசைத்தொழிலாகவும் அதேநேரம் ஆங்காங்கே மிளிரும் மின்மினிப் பூச்சிகள் போலவும் அவ்வப்போது சில திரை முயற்சிகள் தோன்றி மறைகின்றன. 


இந்த நீண்ட நெடிய பயணத்தில் பலர் "நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்" என்று சுயநலமற்று ஈழத்துத் திரைப்படத்துறையினை வளர்ப்பதில் தமது வாழ்நாளில் பெரும்பகுதியினை செலவிட்டுள்ளனர். இருப்பினும் இன்றுவரை எமக்கான ஓர் தனித்துவமான திரைப்படத்துறையினை அமைக்கும் முயற்சியில் வெல்ல முடியவில்லை என்பதே நிதர்சனம்.


நாம் வீழ்வதற்கு நாம் மட்டும் காரணமல்ல, நாம் வீழ்ந்து கிடப்பதற்கு நாம் மட்டுமே காரணம்.


உலகில் இன்றளவும் பொருளாதார ரீதியில் நலிந்த நாடுகளிடமிருந்தோ, எம்மைவிட மக்கள் தொகை குறைந்த நாடுகளிடமிருந்தோ, ஏன் இன்றுவரை இன அழிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வரும் மக்களிடமிருந்தோ வருகின்ற  திரைப்படங்களைக் கூட சர்வதேச விழாக்களிலோ அல்லது சர்வதேசத் தளங்களிலோ (OTT) காணும்போது, இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட இலக்கியச் செழுமை கொண்ட எம்மால் ஏன் இதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை எனும் ஆதங்கம் தவிர்க்க முடியாது எழுகின்றது.


வெறுமனே தமிழ்நாட்டுச் சினிமாவினை எமது மக்கள் "எங்கட சினிமா" என ஏற்றுக்கொண்டு விட்டதே இதற்குக் காரணம். எமது மக்களின் மரபணுவில் தமிழ்நாட்டுச் சினிமா கலந்துள்ளது என மேலெழுந்த வாரியாக கடந்து செல்ல முடியாது. இதைப்போலவே, உதாரணமாக கேரளாவில் மலையாள சினிமாவினை பார்ப்பவர்களை விட தமிழ்நாட்டுச் சினிமா பார்க்கும் மலையாளிகளே அதிகம். அவ்வாறே சிங்கள மக்கள் மத்தியிலும் ஹிந்திப் படங்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ள போதிலும் அவர்கள் திரைப்படங்கள் சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மேற்குறிப்பிட்டவர்களுக்கு மாநில அரசோ அல்லது மத்திய அரசோ பக்க பலமாக இருப்பதையும் இங்கு உற்றுநோக்க வேண்டும்.


இங்குதான் அரசற்ற ஒரு தேசிய இனமாக உலகப் பரப்பில் சிதறி வாழும் நாம், எமது பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல் என்பவற்றை வரலாற்றிலிருந்தும், அடையாளத்திலிருந்தும் ஆழமாக அலசி ஆராய்ந்து பார்த்து முன்னேறிச்செல்ல வேண்டியுள்ளது.


இவற்றினை அடிப்படையாகக் கொண்டு, இதற்கான விநியோகக் கட்டமைப்பு உள்ளடங்கிய திட்ட வரைவொன்றை வகுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழியம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் உள்ளடங்கிய வழிவரைபடத்தினை முன்வைத்து அறிமுகமும் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.


எம் கதைகளை எம் போன்று யாராலும் கூற முடியாது!


 

 

 

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...