' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

படி படி காலையில் படி

 படி படி காலையில் படி




நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி

காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி ( நூலைப்படி )

கற்பவை கற்கும்படி
வள்ளுவர் கொள்கைப்படி
கற்கத்தான் வேண்டும் அப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி ? ( நூலைப்படி )


அறம்படி பொருளைப்படி
அப்படியே இன்பம் படி
இறந்த தமிழ் நான்மறை
பிறந்ததென்று சொல்லும்படி ( நூலைப்படி )

 அகப்பொருள்படி அதன்படி
புறப்பொருள்படி நல்லபடி
புகப்புகப் படிப்படியாய்
புலமை வருமென் சொற்படி
சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி
சேதி அப்படி தெரிந்துபடி
தீமை வந்திடுமே மறுபடி  ( நூலைப்படி )


பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி ? ( நூலைப்படி )

  

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்


 

கருத்துகள் இல்லை