' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ

 

  • Song : Nitham Nitham
  • Movie/Album Name : Bandha Pasam 1962
  • Star Cast : Gemini Ganesan, Sivaji Ganesan, Devika and Savitri
  • Singer :  Sirkazhi Govindarajan
  • Music Composed by : Vishwanathan-Ramamoorthy
  • Lyrics written by : Mayavanathan

 நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ

சுரை விதைத்த நிலத்தில்
வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும் போது
திரை விழுந்தது

சுரை விதைத்த நிலத்தில்
வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும் போது
திரை விழுந்தது
தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று
மயங்குகின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று
மயங்குகின்றது

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ

இளமை துள்ளி எழுந்து நின்று
காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று
கடமை என்றது

இளமை துள்ளி எழுந்து நின்று
காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று
கடமை என்றது
காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது
என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான்
வாழ்க்கை என்பது
என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான்
வாழ்க்கை என்பது

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ

தனிக் கொடியாய் நடை இழந்து
தவித்தது ஒன்று
அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க
நின்றது ஒன்று
இதற்க்கிதுதான் என்று முன்பு யார் நினைத்தது
வழி இங்கு வந்து முடியும் என்றால்
யார் தடுப்பது
வழி இங்கு வந்து முடியும் என்றால்
யார் தடுப்பது

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ

கருத்துகள் இல்லை