' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

செங்கல் சூளைகாரா

 

திரைப்படம்: வாகை சூட வா
பாடகர்:அனிதா கார்த்திகேயன் 
இசையமைப்பாளர்:எம். ஜிப்ரான் 
பாடலாசிரியர்: வைரமுத்து

செங்கல் சூலைக்காரா
செங்கல் சூலைக்காரா
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
செங்கல் சூலைக்காரா..
செங்கல் சூலைக்காரா..
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா

சுட்ட சுட்ட
மண்ணு கல்லாச்சு
நட்ட நட்ட கல்லு வீடாச்சு
நச்சு நச்சுப் பட்ட நம்ம
பொழப்புதான் பச்ச
மண்ணா போச்சே

வித்த வித்த
கல்லு என்னாச்சு
வின்ன வின்ன தொட்டு நின்னாச்சு
மண்ணு குழிப்போல நம்ம பரம்பரை
பள்ளம் ஆகிப்போச்சே

அய்யனாரு சாமி
அழுது தீர்த்து பார்த்தோம்
சொரணைக்கெட்ட சாமி
சோத்த தானே கேட்டோம்

கால வாச தந்துப்போட
கள்ளி முள்ளு வெட்டி வாடா

செங்கல் சூலைக்காரா.. 

செங்கல் சூலைக்காரா..
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா

மண்ணு மண்ணு
மட்டும் சோறாக
மக்க மக்க வாழ்ந்து வாராக
மழை வர போகுது
மழை வர போகுது
மழை மழை வந்து
மண்ணு கரைகையில்
மக்க எங்க போக

இந்த களி மண்ணு வேகாது
எங்க தலைமுறை மாறாது
மண்ண தீண்டி வாழும்
மண்ணு புழுவுக்கு
வீடு வாசல் ஏது

அய்யனாரு சாமி
கண்ணு தொறந்து பாரு
எங்க சனம் வாழ
ஒன்ன விட்டா யாரு

எதிர்காலம் உனக்காக
எட்டு எட்டு வச்சிவாடா
தந்தானே தானே
தந்தன்னானே தானே

வேர்வை தண்ணி
வீட்டுக்குள்ள
விளக்கு ஏத்தும் வாடா
வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள
விளக்கு ஏத்தும் வாடா..

 

 

கருத்துகள் இல்லை

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் ‍‍‍‍- 29

 கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - ‍‍‍‍ 29  ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை மாலை 7மணி Tamil Writers...