' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பண்பாட்டு மானிடவியலின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு.

 


அறிதலும் பகிர்தலும் 13
பண்பாட்டு மானிடவியலின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு.
மானிடவியல் என்னும் கல்வித்துறை 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியில் தோற்றம் பெற்றது. எட்வார்ட் B டைலர் (EDWARD B. TYLOR) 1832 – 1917 லூயிஸ் ஹென்றி மோர்கன் (LOUIS HENRY MORGAN) 1815 – 1881 ஆகிய இருவரினதும் எழுத்துக்கள் நாகரிகத்தில் முன்னேற்றம் அடையாத பழங்குடி மக்களின் பண்பாட்டைப் பற்றிய ஆய்வாக அமைந்தன. டைலர் ‘PRIMITIVE CULTURE’ (புராதன சமூகங்களின் பண்பாடு) என்ற நூலை 1871 இல் வெளியிட்டார். மோர்கன் ‘ANCIENT SOCIETY’ (பண்டைய சமூகம்) 1877 இல் வெளியிட்டார். இவ்விருவரையும் அடுத்து மானிடவியல் ஆய்வுகளை வெளியிட்ட பிரான்ஸ் போவாஸ் (FRANTZ BOAS) 1858 – 1942 அறிவுலகின் கவனத்தை ஈர்த்தார்.
மானிடவியலின் தோற்ற காலத்தில் தோன்றிய எழுத்துக்கள் பரிணாமவாதம் (EVOLUTIONISM) என்ற பெயரால் அழைக்கப்படும் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தனவாக இருந்தன. உயிர்களின் பரிணாமத்தை பற்றிச் சமகாலத்தில் எழுதிய டார்வின் இயற்கை விஞ்ஞானத் துறையான உயிரியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருந்தார். இதே காலப்பகுதியில் ஹெர்பட் ஸ்பென்சர் (1820-1903) என்ற சமூகவியலாளர், சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் பரிணாம விதிகள் கொண்டு விளக்க முற்பட்டார்.
மானிடவியல், சமூகவியல் ஆகிய துறைகளில் வேர்கொண்ட பரிணாமவாதச் சிந்தனை சமூகப் பரிணாமவாதம் (SOCIAL DARWINISM) என்று அழைக்கப்படலாயிற்று.
பிரான்ஸ் போவாசின் மாணவர் பரம்பரையினரான குரோபர் (KROEBER), ருத் பெனடிக்ட் (RUTH BENEDICT), மார்கரெட் மீட் (MARGARET MEAD) ஆகிய அமெரிக்கர்கள் மானுடவியலை புலமையுலகில் மதிப்புக்குரியதொரு துறை என்ற கணிப்பை பெற உதவினர்.
அமெரிக்க பரிணாம வாதத்தில் இருந்து கிளை பிரிந்த,
அ) பரவல் கொள்கை (DIFFUSIONISM)
ஆ) ஒவ்வொரு பண்பாடும் அதற்கேற்ற உரித்தான தனித்துவம் உடையது. குறித்தவொரு பண்பாட்டின் ஆய்வு அப்பண்பாட்டின் வரலாற்றுத் தனித்துவத்தின் (HISTORICAL PARTICULARISM) நோக்கில் ஆராயப்பட வேண்டும் என்னும் கோட்பாடு.
ஆகியன வளர்ச்சி பெற்றன. சமகாலத்தில் பிரித்தானியாவில் i) ரட்கிளிவ் பிரவுன் (RADCLIFF BROWN) ii) புரோனிஸ்லோவ் மாலினோ வொஸ்கி என்னும் இருவரும் மானுடவியலில் செயல்வாதம் (FUNCTIONALISM) என்னும் கோட்பாட்டை உருவாக்கினர்.
பிரித்தானிய – அமெரிக்க மானிடவியல்களின் இணைவாக அமைப்பியல் செயல்வாதம் (STRUCTURAL FUNCTIONALISM) என்னும் சிந்தனைப் பிரிவு வளர்ச்சி பெற்றது.
அறிதலும் பகிர்தலும் கருத்துப் பகிர்வின் 13 வது நிகழ்வாக 'பண்பாட்டு மானிடவியலின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு' என்னும் தலைப்பில் நடைபெறும் உரையாடலில் இருபதாம் நூற்றாண்டு மானிடவியலின் முக்கிய சிந்தனைப் போக்குகளான
I. பரிணாமவாதம் (EVOLUTIONISM)
II. பரவல் கொள்கை (DIFFUSIONISM)
III. அமைப்பியல் செயல்வாதம் (STRUCTURAL FUNCTIONALISM)
IV. மார்க்சீய மானிடவியல்
என்பன குறித்து வரலாற்று நோக்கில் விவாதிக்கப்படும். பிரதான உரையினை சமூகவியல் ஆய்வறிஞர் திரு. கந்தையா சண்முகலிங்கம் நிகழ்த்துவார். திரு. ச. சத்தியதேவன் அவர்கள் ஒருங்கிணைப்பார். இந்நிகழ்விலும் அதன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள உரையாடலிலும் பங்கேற்பதோடு ஆர்வமுள்ள நண்பர்களிடமும் பகிருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திகதி - ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 27, 2022
நேரம் - இலங்கை நேரம் இரவு 7:30 மணி
ரொரன்றோ நேரம் காலை 10 மணி
இங்கிலாந்து நேரம் பிப 3:00
Meeting ID: 827 8520 7411

 https://vithaikulumam.com/

 

கருத்துகள் இல்லை

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் ‍‍‍‍- 29

 கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - ‍‍‍‍ 29  ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை மாலை 7மணி Tamil Writers...