' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

மூப்பில்லா தமிழே தாயே

 

புயல் தாண்டியே விடியல்!
புதுவானில் விடியல் ! பூபாளமே வா...
தமிழே வா வா...
தரணியாளத்
தமிழே வா..!

விழுந்தோம் முன்னம் நாம்...
எழுந்தோம் எப்போதும் !

பிரிந்தோம் முன்னம் நாம்...
இணைந்தோம் எப்போதும் !

திசையெட்டும் தமிழே எட்டும்...
தித்தித்தோம் முரசம் கொட்டும் !
மதிநுட்பம் வானை முட்டும் !
மழை முத்தாய்க் கடலில் சொட்டும் !
 
திசையெட்டும் தமிழே எட்டும்...
தித்தித்தோம் முரசம் கொட்டும் !
மதிநுட்பம் வானை முட்டும் !
மழை முத்தாய்க் கடலில் சொட்டும் !

அகம் என்றால் அன்பாய்க் கொஞ்சும் ! புறம் என்றால் போராய்ப் பொங்கும் !
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும் !
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும் !

உறங்காத பிள்ளைக்கெல்லாம் தாலாட்டாய்த் தமிழே கரையும் !
பசியென்று யாரும் வந்தால்
பாகாகி அமுதம் பொழியும் !

கொடைவள்ளல் எழுவர் வந்தார்...
கொடை என்றால் உயிரும் தந்தார் ! படைகொண்டு பகைவர் வந்தால்...
பலபாடம் கற்றுச் சென்றார் !

மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் வென்றார் !
பாவேந்தர் என்றே கண்டால்
பாராளும் மன்னர் பணிந்தார் !


அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே
தாயே !.

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே
தாயே !.


உதிர்ந்தோம் முன்னம் நாம்...
மலர்ந்தோம் எப்போதும் !

கிடந்தோம் முன்னம் நாம்...
கிளைத்தோம் எப்போதும் !

தணிந்தோம் முன்னம் நாம்...
எரிந்தோம் எப்போதும் !

தொலைந்தோம் முன்னம் நாம்... பிணைந்தோம் எப்போதும் !

விழுந்தோம் முன்னம் நாம்...
எழுந்தோம் எப்போதும் !


அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே
தாயே !.


 தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று ! இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று !...


காலங்கள் போகும்போது மொழி சேர்ந்து முன்னால் போனால்... அழிவின்றித் தொடரும் என்றும் !
அமுதாகிப் பொழியும் எங்கும் !


விஞ்ஞானத் தமிழாய் ஒன்று...
வணிகத்தின் தமிழாய் ஒன்று...
இணையத்தின் நூலைக் கொண்டு
இணையும் தமிழ் உலகப் பந்து !


மைஅச்சில் முன்னே வந்தோம் !
தட்டச்சில் தனியே நின்றோம் !கணினிக்குள் பொருந்திக் கொண்டோம் !
கலைக்கேற்ப மாறிக் கொள்வோம் !


உன்னிப்பாய்க் கவனம் கொண்டோம் ! உள்வாங்கி மாறிச் செல்வோம் !
பின்வாங்கும் பேச்சே இல்லை... முன்னோக்கிச் சென்றே வெல்வோம் !


புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்...
ஆடைகள் அணியும் புதிதாய் !


எங்கேயும் சோடை போகா
என்னருமைத் தமிழே
வா வா..!
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வில்
வளம் பொங்க வாவா
வாவா...!

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாயத் தமிழே
தாயே !.


 
பழங்காலப் பெருமை பேசி...
படிதாண்டா வண்ணம் பூசி...
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே..!
நீ சீறி வாவா வெளியே !


வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப் படுவார் வீட்டில் !
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
செயல் என்றே
சொல்சொல் சொல்சொல்...!


சென்றிடுவோம் எட்டுத் திக்கும்...
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்...
இருக்கைகள்
தமிழுக்கமைப்போம்..!
ஊர்கூடித் தேரை இழுப்போம் !


மொழியில்லை என்றால் இங்கே...
இனமில்லை என்றே அறிவாய் ! விழித்துக்கொள் தமிழா முன்னே...!
பிணைத்துக் கொள் தமிழால் உன்னை..!


தமிழெங்கள் உயிரே என்று
தினந்தோறும் சொல்வோம் நின்று ! உனையன்றி யாரைக் கொண்டு
உயர்வோமோ உலகில் இன்று !!!...


அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !

புயல் தாண்டியே விடியல்!
புதுவானில் விடியல் ! பூபாளமே வா...
தமிழே வா வா...
தரணியாளத்
தமிழே வா..!


தயாரிப்பாளர்: ஏ ஆர் ரஹ்மான்
பாடலாசிரியர்: தாமரை
இயக்குனர்: அமித் கிருஷ்ண‌ன்


A.R.ரஹ்மான் ஸ்டூடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 


 
https://www.kalaignarseithigal.com/cinema/2022/03/25/tn-cm-mk-stalin-went-to-ar-rahmans-studio-i-dubai-moopilla-thamizhe-thaaye


கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...