' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பனங்காய் பணியாரமே

 

 

 

கவிதைகள் எழுத ஆரம்பித்த பின்பும் சரி, 2000 ஆண்டில் பாடல்கள் எழுதத் தொடங்கியபோதும் ஒரு தெளிவோடு இருந்தேன். இளைஞர்களை, யுவதிகளை புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழோடு இணைத்து வைப்பதற்கு என்னுடைய இசைப்பாடல்கள் மிகப்பெரிய உறவுப் பாலமாக இருக்கவேண்டும். நான் எழுதுகின்ற பாடல்கள் எங்கள் தாய்மண்ணையும், மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அதற்கான ஆழமான தேடலும் நிறைந்த மினக்கெடலும் தான் என்னையும், உதயன் அண்ணாவையும் சேர்த்து வைத்தது என்று நம்புகின்றேன். தமிழசினிமாவில் முழ்கி முத்துக்குளித்து, இசையைப் பருகிக்கொண்டிருந்த எம்மவர்களை எமது பாடல்களை விரும்பி, மீண்டும் மீண்டும் கேட்க வைக்க வேண்டும் என்று எண்ணினோம். அந்த எண்ணத்தில் உருவான பாடல் தான் எனக்கும் உதயன் அண்ணாவுக்கும் மிகப்பெரிய கலை அங்கீகாரத்தை மக்களிடம் பெற்றுத் தந்தது. என் படைப்பின் மூலமே என்னை பரவலாக தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் அறியவும், தாயகத்தில் யார் இவர் என்று தேடவும் செய்த பாடல்கள் இரண்டு. அவற்றில் ஒன்று தான்.. |பனங்காய்ப் பணியாரம் அடி | பனங்காய்ப் பணியாரமே | பாடல். சூழ்நிலை: ஒரு ஆண் தான் விரும்பும் உணவு, மண் மணம் வீசும் சிற்றுண்டியை ஒரு பெண்ணோடு ஒப்பிட்டு பாடுவது. எங்களுடைய அடையாளமாக உயர்ந்து நிற்பது பனைமரங்கள். அவரின் இருந்து பனம்பழத்தைக் கொண்டு பனங்காய்ப் பணியாரம் செய்வார்கள். ஆகவே அந்தப் பணங்காய்ப் பணியாரத்தை காதலிக்கும் பெண்ணோடு இணைத்து வருணித்தல், தாயகத்தில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கும் அவற்றையும் எடுத்துச் இந்தப் பாடல் அமைகின்றது. தொகையரா: வல்லைவெளி காற்றடிக்கும் திரளி மீன் துள்ளியெழும் ஒடியல் கூழ் குடித்தால் மனமெங்கும் விண்கூவும் பல்லவி பனங்காய்ப் பணியாரமே பனங்காய்ப் பணியாரமே பச்சைக் கொழுந்து வெத்திலையே உன் பார்வை கொஞ்சம் பத்தலையே பனையோலைப் பாய் விரிச்சு படுத்துறங்கும் மணியக்கா மணியக்கா கமுகமரப் பாக்குத் தந்து கவுக்கிறது என்னக்கா சரணம் 1 காங்கேசன்துறை சுண்ணாம்பை கொஞ்சம்தடவித் தடவிகொடடி உன் கையால என் வாய் சிவக்க வெற்றிலை மடிச்சுக் கொடடி கொக்கார மூலைக்குள்ளே கொக்கு வந்து நிக்குது கொக்கரக்கோ சேவல் என் வீட்டுக் கூரையில் ஏறுது. கீரிமலை பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும் ஒன்றாகச் சேர்த்தடிச்சா கிக்குத்தான் கிக்குத்தான் நான் கோவிற்கடவை ஆளு! நீ சேலை கட்டிய தேரு ! சரணம் 2 மட்டு நகர் தயிர் எடுத்து வளைஞ்சி நெளிஞ்சி வாடி என் உயிரை பிடித்து உறைய வைத்து உறியில் வைத்துப் போடி மண்பானைத் தயிர் கனக்கம் என் நெஞ்சு துடிக்கும் சும்மாடாய் நான் வரவா? சும்மாடாய் நான் வரவா? கண்டிக் குளிருலதான் கைகால் விறைக்குதடி கொஞ்சம் சூடேத்த நெஞ்சு நினைக்குதடி முல்லைத்தீவு போவோம் முயலு இரண்டு பிடிப்போம் நீ மூச்சிழுக்கும் நேரம் நான் பேச்சிழந்து போவேன் 

பாடல் : வசீகரன் 

குரல் : கிருஷ்ணராஐ குழுவினர் 

இசை : வி.எஸ்.உதயா 

எண் : 05 

ஏட்டில் : 25.07.2002 

இறுவட்டு: காதல் கடிதம் 

வெளியீடு: 02.08.2003 

தயாரிப்பு : வசீகரன் ஆக்கம் தமிழ் 

 

 நன்றி: வசீகரன் சிவலிங்கம் 

 https://www.facebook.com/vaseeharan

 https://soundcloud.com/vaseeharan_creations/eluthu-eluthu-anbe-boy-kadhal?in=vaseeharan_creations/sets/kadhal-kaditham-album-2003

கருத்துகள் இல்லை