' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஆத்மாநாம் கவிதைகள்

  

ஆத்மாநாம் கவிதைகள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyAFGkMc9UtMiTokqO0VMKd6XIRsLwy-BioLvKMcLyhgfAIIanqe6KG4eJ9RInUNLMZ2IrBsX-qANa-Sh4MY3MIzfypTTrAAyUsINFJ6Wv4F5TV67_MA1q4wnfLik_cOHw50bVJEyLDW0/s1600/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.jpg
 கவிஞர் ஆத்மாநாம் 
18-01-1951 -  06-07-1984

30 வயதுவரை குறுகிய காலங்களே வாழ்ந்தவர். இருப்பினும் தனித்துவம் மிக்கவையாகவும் பிரக்ஞைபூர்வமான கவிஞராக அவரது ஆளுமையை வெளிப்படுத்தும் கவிதைகளாக அவருடைய கவிதைகள் கருதப்படுகின்றன.
 
சக மனிதனுக்குக் கவிதை புரிய வேண்டுமென்ற கவனமும் அதற்குரிய எளிமையும், புதுமை வீரியம், இயல்புத்தன்மை, வாழ்வியல் பார்வையின் அகண்ட பிரதிபலிப்பு; இவரது கவிதைகளில் விரவிக்கிடப்பதைக் காணலாம்.
 
ஒவ்வொரு படைப்பாளியும் தன் மறைவுக்குப் பின்னும் தன் படைப்புகள் வாழ்ந்துகொண்டிருக்கவேண்டுமென்று ஆத்மார்த்தமாக விரும்புகின்றான். கவிஞர் ஆத்மாநாம் அதனைத் தன் கவிதை ஒன்றிலும் «என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்க இயலாது» என்று மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றார்.
 
அந்தக் கவிஞனைப் பற்றிய ஒட்டுமொத்தத் தரிசனத்தை உள்ளுணர்த்தக்கூடிய கவிதை அது:
 
ஆத்மாநாம் கவிதை
------------------------------
அழிவு

என்னை அழித்தாலும்
என் எழுத்தை அழிக்க இயலாது
என் எழுத்தை அழித்தாலும்
அதன் சப்தத்தை அழிக்க இயலாது
என் சப்தத்தை அழித்தாலும்
அதன் எதிரொலியை அழிக்க இயலாது
என் எதிரொலியை அழித்தாலும்
அதன் உலகத்தை அழிக்க இயலாது
என் உலகத்தை அழித்தாலும்
அதன் நட்சத்திரக் கூட்டங்களை அழிக்க இயலாது
என் நட்சத்திரக் கூட்டங்களை அழித்தாலும்
அதன் ஒழுங்கை அழிக்க இயலாது
என் ஒழுங்கை அழித்தாலும்
அதன் உள்ளழகை அழிக்க இயலாது
என் உள்ளழகை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
என்னை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
அழிப்பது இயல்பு

தோன்றுதல் இயற்கை 
 
 

 ஸ்ரீமதி கவிதா லக்ஷ்மியின் நெறியாள்கையில் நோர்வே கலாசாதனா பள்ளியினரால், வலையொளியில் வெளியிடப்பட்டது.
 
Poem 4: Destruction (Edited version)
Dancers: Shadana, Indusha, Hasini 
Composer, Singer: Gomathinayaham 
Video : Vicknakumar Mahesan 
Choreography: Kavitha Laxmi
 

கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...