' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

புலனம் (WhatsApp) தனியுரிமைக் கொள்கையும் சேவை விதிமுறையும்

 நீங்கள் புலனம் பாவனையாளரா?

 உங்களுக்கு  கீழேயுள்ளது போன்று ஒரு செய்தி வந்ததா?

அதன் விபரம்:
புலனம் (WhatsApp) அதன் தனியுரிமைக் கொள்கையையும் சேவை விதிமுறைகளையும்  புதுப்பித்துள்ளது. வருகிற 08.02.2021 க்குள்  இந்த புதிய மாற்றத்தினை பயனர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால்  புலனத்தை பாவிப்பவர்கள் தொடர்ந்து பாவிக்க முடியாமல் முடக்கப்படும்.
 
முகநூல்  நிறுவனக் கூட்டமைப்பு (Facebook Groups) வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைய புலனம் அதன் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளையும்  புதுப்பித்துள்ளது.

புதிய அம்சத்தின் வெளியீடு அல்லது புதிய செயல்பாட்டைச் சேர்க்கும் வழமையான புதுப்பித்தல்  போலன்றி, புலனம் இம்முறை, இந்த வார தொடக்கத்தில் கிட்டத்தட்ட சத்தமே இல்லாமல் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

 இருப்பினும், ஒரு பயன்பாட்டு அறிவிப்பு (App Notice) வழியாக புலனம் அதன் Antriod மற்றும் iPhone பயனர்களுக்கு குறிப்பிட்ட மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு புலனம் அதன் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளில் கொண்டு வந்த மாற்றங்களின் ஒரு காட்சியை வழங்குகிறது. ஒரு முழு திரை அறிவிப்பு வழியாக நேரடியாக மாற்றத்தினை   ஒப்புக்கொள்வதற்கான விருப்பத்தையும் அது வழங்குகிறது. மேலே இணைக்கப்பட்ட படத்தைப் பார்க்கவும். இதுவே அந்த அறிவிப்பு:

மாற்றங்களைப் பொறுத்தவரை, புலனத்தின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் ஆனது புலனம் பயனர்களின் தகவலை எவ்வாறு சேகரிக்கிறது மற்றும் எப்படி கையாளுகிறது என்பதற்கான கூடுதல் தகவல்களை வழங்குகிறது.

உடன் பரிவர்த்தனைகள் (Transactions) மற்றும்
பணம் செலுத்துவது பற்றிய (Payments) தகவல்கள், மேலும் நீங்கள் தங்கியிருக்கும் இடங்கள் பற்றிய (Location) விவரங்கள் உள்ளிட்ட புதிய பிரிவுகளும் உள்ளன. புலனம் தனது செய்தி பரிமாற்றம் செய்யும் தளம் (Messaging platform) மூலம் நடைபெறும் வணிக தொடர்புகள் குறித்த தகவல்களையும் சேர்த்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் இரண்டிலும் உள்ள மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாக - புலனம், முகநூல்  மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் எவ்வாறு தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது என்கிற தகவலும் உள்ளன.

சமீபத்திய மாற்றத்திற்கு  முன்னர், ஏற்கனவே உள்ள பயனர்கள் தங்கள் புலனம் கணக்கில்  தகவல்களை
முகநூலில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பதைத் தேர்வு செய்ய விருப்பம் வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த முறை அப்படி எதுவும் இல்லை. நேரடியாக ஒப்புக் கொள்ளவே வற்புறுத்துகின்றனர்.

புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் 08.02.2021 முதல் நடைமுறைக்கு வரும், எனவே புலனம் ஒரு அறிவிப்பு மூலம் இதை அதன் பயனர்களுக்கு அறிவிக்கும். அதன் பிறகு பயனர்கள் தங்கள் போனில் தொடர்ந்து புலனத்தைப்  பயன்படுத்துவதற்காக, குறிப்பிட்ட மாற்றத்தினை  "கட்டாயமாக" ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

 இதன் பொருள் ஒரு பயனர் புதிய மாற்றங்களை ஏற்கவில்லை என்றால், அவர்கள் புலனம் செயலியிற்கான  அணுகலை இழக்க நேரிடும். இதனை நினைவூட்டும் வண்ணம், புலனத்தின்  புதிய தனியுரிமை விதிகளின் "கட்டாய தன்மையை" புலனம் அம்சங்களை கண்காணிக்க இருக்கின்றது. இந்த மாற்றத்தினை பரிசீலித்த WABetaInfo நிறுவனம்  கடந்த மார்கழி மாதமே இந்த நடைமுறையினைக் கண்டறிந்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 புலனம் இலவசமில்லை. எங்களின் தகவலின் பெறுமதியே அதன் விலை.

கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...