கிளிநொச்சியில் பாலு மகேந்திரா நூலகம் வெளியீட்டு விழா
ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பாகிய பாலு மகேந்திரா நூலகத்தின் இணையத்தள வெளியீடு 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணிவரை (தாயகநேரம்) இணைய வாயிலாக நடைபெற்றது.
*****************பாலுமகேந்திரா
நூலகம்********************
” எனது
படங்களில் ஏதாவது தனித்தன்மை
இருக்குமானால் அது எனக்கும்
இலக்கியத்திற்குமான பரிச்சயம்
“ இதைக் கூறியவர்
#இயக்குனர்_பாலுமகேந்திரா.
நல்ல
புத்தக வாசிப்பே சிறந்த
சினிமாவை உருவாக்கும் என்று
தொடர்ந்து பேசி வந்த
பாலுமகேந்திராவின் நினைவாக
உதவி இயக்குனர்கள் மற்றும்
தீவிர வாசகர்களுக்காக
எழுத்தாளர், இயக்குனர்
அஜயன்பாலா அவர்கள் பாலுமகேந்திரா
நூலகம் என்ற பெயரில் புதிய
நூலகம் ஒன்றை துவங்கியுள்ளார்.
இதன்
துவக்க விழா கடந்த 2018 ஏப்ரல்
14, தமிழ்புத்தாண்டு
அன்று நடிகர் சத்யராஜ்,
இயக்குனர்கள்
ராம், வெற்றிமாறன்,
ஏ.எல்.விஜய்,
ரோகினி,
மீரா கதிரவன்,
சுப்ரமணிய
சிவா, எழுத்தாளர்
பாமரன், முனைவர்
நாச்சிமுத்து ஆகியோரின்
முன்னிலையில் கவிக்கோ மன்றத்தில்
நடைபெற்றது.
இந்த
நூலகத்தில் சிறப்பம்சங்கள்
நிறைய இருந்தாலும் முக்கியமான
இரண்டு உள்ளது.
பொதுவாக
நாம் வாங்கும் புத்தகம் சிறந்த
புத்தகமா அல்லது இப்போது
அவசியமா என்ற புரிதலை உணருவதற்கே
சொற்ப காலத்தை கடன் கொடுக்க
வேண்டும். அதன்பொருட்டு
சினிமா கலைஞர்களின் வளர்ச்சிகுறித்து
மற்றும் வாழ்க்கையை பண்படுத்தும்
விதமாக தேர்வு செய்யப்பட்ட
புத்தகங்களே அமையப்பெற்றிருக்கின்றன.
அப்படி
தேர்ந்த புத்தகங்களை வீட்டிற்கு
எடுத்துச் சென்று படிக்கவும்
அனுமதி.
இப்படியாக
உதவி இயக்குனர்கள் படிப்பதற்கான
பணப்பற்றாக்குறை, தேர்ந்த
புத்தகம் என பல தடைகளை நீக்கி
சினிமாவை அடைய உதவும் திசைகளாக
இந்நூலகம் அமைகிறது.
சிறந்த
சினிமா , உலக
சினிமா என சினிமாவின்
ஆரோக்கியத்தின் மேல் அக்கறைப்படும்
அத்துனை இயக்குனர்கள்,
உதவி
இயக்குனர்கள், தொழில்நுட்ப
கலைஞர்கள், ஆர்வலர்கள்
என அனைவரும் முதலில் திரும்பிப்
பார்க்க வேண்டிய, பரப்ப
வேண்டிய, மகிழ்ச்சியடைய
வேண்டிய முக்கிய விசயம்
இந்நூலகம்.
முழுக்க
முழுக்க சினிமாவுக்காக
உருவாக்கப்பட்டிருக்கும்
இந்நூலகத்தில் சினிமா ,
நாவல்,
சிறுகதை,
வரலாறு,
கட்டுரை,
வாழ்க்கை
வரலாறு,
கவிதைகள்,
மொழிபெயர்ப்பு,ஆங்கிலம்,நாடகம்,
என பல்வேறு
வகைப்பட்ட சிறந்த புத்தகங்கள்
இருக்கிறது.
புத்தகத்தை
எடுத்துசென்று வீட்டிலே
படிக்கலாம், கால
அவகாசம் 14 நாட்கள்.
முடிந்தவுடன்
அடுத்த புத்தகத்தை எடுத்து
சென்று படிக்கலாம். வருட
சந்தா வெறும் ரூ.250 மட்டுமே.
அதுவும்
புத்தகத்தின் மரியாதை
கருதியே.
“ உங்கள்
நோக்கம் ஒரு திரைப்பட இயக்குனர்
ஆவதுதான் என்றால் திரைக்கதை
எழுத நீங்கள் உலகின் சிறந்த
புதினங்களையும் நாடகங்களையும்
கற்றறிய வேண்டும் ”
#அகிரா_குரோசாவா
-
#தொடர்புக்கு
:
பாலுமகேந்திரா
நூலகம்,
எண்.1,
திலகர் தெரு,
சாலிகிராமம்,
சென்னை
600093
தொடர்புக்கு
: 9884060274,9626866127,9944130984
#வழி:
பிரசாத்
ஸ்டுடியோ எதிரில்,
காவேரி
தெருவில் (முதல்
வலது தெரு)
கருத்துகள் இல்லை