' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

  உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை 47 ஆம் ஆண்டு நினைவு இன்று


 
1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.


 உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன் போது 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழர்கள் ஒவ்வொருவர் மனத்தில் நீங்காத வடுக்களாக பதியப்பட்டுள்ள இவ்வாறான சம்பவங்கள், தமிழர் தம் போராட்டத்துக்கு நியாயம் சேர்த்து வருகின்றன என்பதே உண்மை.
இந்தச் சம்பவம் இடம்பெற்று 47 ஆண்டுகள் கடந்துள்ள போதும், இன்னும் அது தொடர்பில் எவ்வித நியாயமும் கிடைக்காமல் உள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 

 

கருத்துகள் இல்லை

Alle Jahre wieder - Museumsuferfest