' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

அமைதிப் புறாவே

 


 

அமைதிப் புறாவே அமைதிப் புறாவே
அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே நான்
நேசிக்கின்றேன் உன்னை (அமைதி)

காலங்களாலே தென்றல் வருக
புயலே வர வேண்டாம்
மேகங்களாலே மழையே வருக
வெள்ளம் வர வேண்டாம்

வீடுகள் தோறும் ஒளியே வருக
இருளே வர வேண்டாம்
நாடுகள் தோறும் உறவே வருக
பகையே வர வேண்டாம்

சமாதானமே சமாதானமே
தழுவுகிறேன் உன்னை
தர்மதேவனே தர்மதேவனே
சரணடைந்தேன் உன்னை (அமைதி)

புத்தன் வழியில் அசோகன் சேவை
புரிந்தது எதற்காக
புன்னகை முகமே தேவனின் வீடெனச்
சொன்னது எதற்காக

சத்திய நெறியைத் தாரணி எங்கும்
தந்தது எதற்காக
சமாதானமாம் சமாதானமாம்
தாயே உனக்காக ! தாயே உனக்காக ! (அமைதி)

Music Director: K.V.Mahadevan
Lyricist: Kannadasan
Singers: P.Suseela
Movie: Thaye Unakkaga
Actors: Sivaji Ganesan, Padmini, Sivakumar and Pandari Bai
Director: P. Pullaiah
Production: Sree Kamalaalayam
Released date: 26 August 1966

கருத்துகள் இல்லை

Ray of Hope Documentary - Trailer

Lived and told by: Rathika Sitsabaiesan, MIR, ADR, Prosci, Ziglar Coach Sutha Shanmugarajah Collin Collin Directors/Writers: Ryan Singh , ...