' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

திக்கித் தெணறுது தேவதை

 


https://youtu.be/yfCK2Rg5o4I

பல்லவி
--------------
திக்கித் தெணறுது தேவதை
வெட்கப்படுதொரு பூமழை - தானா
சிக்கிக் கெடக்கிறேன் ஆம்பளை நான் தான்

அரிசி நெல்லுலயும்
குத்தும் முள்ளுலயும்
ஓம் மொகம் வந்து சிரிக்கும்
அந்த நிலா தோத்துப் போகும்

ஒன்ன பாத்த நேரம்
வாழ்க்கை பிடிக்குதே

கட்டிக் கரும்புல தேன்துளி
என்னை மெரட்டுது ஓம் முழி
நீதான் புத்தம் புதுசா
பூத்த பூச்செடி போல

ஆளைக் கொல்லுறியே
ஆயுள் கேக்கிறியே

நீ வரும் நேரம் கொழம்பும்
கடிகாரம் தன்னை மறக்கும்
இதயம் துடிக்க மறந்து
செலையா நிக்கிறேன்....


சரணம்
------------
அணைக்கட்டுத் தண்ணி
போல நிக்கிறேன்

அர்த்த ராத்திரி
முழிச்சிக் கெடக்கிறேன்

ம்ம் ம்ம் ம்ம்

மொட்டுச் சிரிப்புல
ஒறைஞ்சிக் கெடக்கிறேன்

கிட்ட நடக்கையில்
கெறங்கித் தவிக்கிறேன்

ஆத்தாடி உசிரெல்லாம்
ஒழுகித் துடிக்கிறேன்

உறவாக... ஒன்ன நான்
கடவுள் கிட்ட கேட்டு வாங்குவேன்

( திக்கித் தெணறுது தேவதை )

-----------------------------------------------------------------
பாடியவர்கள் : ஆஜீத், ஸ்ருதி
பாடலாசிரியர் : முருகன் மந்திரம்
இசை : அபிஜித் ராமசுவாமி
இயக்கம் : ஆஷிக்
-----------------------------------------------------------------

கருத்துகள் இல்லை

எழுதுவது எப்படி?

 எழுதுவது எப்படி?   எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்   புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட...