' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

நடந்து வந்த பாதையிலே

 


நடந்து வந்த பாதையிலே
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவர் எல்லாம் வாழ்வதில்லை
                                                (நடந்து வந்த பாதையிலே)

வந்தது வரட்டும் போடா என்று
வாழும் மனிதர் ஒரு வழியில்
வந்தது வரட்டும் போடா என்று
வாழும் மனிதர் ஒரு வழியில்
அவர் வாய்ச் சொல் கேட்டு
தவறுகள் புரிந்து
வழியை மறந்தவர் நடு வழியில்
அவர் வாய்ச் சொல் கேட்டு
தவறுகள் புரிந்து
வழியை மறந்தவர் நடு வழியில்
                                                (நடந்து வந்த பாதையிலே)

வழியில் துணையாய் வருபவரெல்லாம்
வாழ்க்கைத் துணையாய் ஆவாராஆஆஆ
வழியில் துணையாய் வருபவரெல்லாம்
வாழ்க்கைத் துணையாய் ஆவாராஆஆஆ
பாசத்தோடு அருகில் இருந்து
பணிகள் யாவும் செய்வாரா
பாசத்தோடு அருகில் இருந்து
பணிகள் யாவும் செய்வாரா
                                                (நடந்து வந்த பாதையிலே)

கடமையினாலே சுகத்தை மறந்தவர்
வாழ்வில் காண்பது அன்பு வழி
கடமையினாலே சுகத்தை மறந்தவர்
வாழ்வில் காண்பது அன்பு வழி
மடமையினாலே தன்னை மறந்தவர்
வருந்தி நிற்பது துன்ப வழி
மடமையினாலே தன்னை மறந்தவர்
வருந்தி நிற்பது துன்ப வழி
                                                (நடந்து வந்த பாதையிலே)

திரைப்படம்: ஆசை அலை (1963)
இசை: கே.வி. மகாதேவன்
பாடியவர்: ரி.எம். சௌந்தரராஜன்
எழுதியவர்: பஞ்சு அருணாசலம்

கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...