' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

நல்லவன் கையில் நாணயம் இருந்தால்

 


நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்  
                        (நல்லவன்)
அது பொல்லாதவன் பையில் இருந்தால்
எல்லா உயிர்க்கும் பாதகம்
எல்லா உயிர்க்கும் பாதகம்
                        (நல்லவன்)
இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான்
                        (இருப்பவன்)
பணத்திமிர் கொண்ட மனிதர் நிமிர்ந்திருந்தாலும்
நடை பிணமாக நடக்கின்றான்
                        (நல்லவன்)
லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம்
எச்சிலை போலே பறக்குமடா

அச்சடித்திருக்கும் காகித பெருமை
ஆண்டவனார்க்கும் இல்லையடா
ஆண்டவனார்க்கும் இல்லையடா
                        (நல்லவன்)

ஓடும் உருளும்
ஓடும் உருளும் உலகம் தண்ணில்
தேடும் பொருளும் தேவைதான்
தேடும் பொருளும் தேவைதான்

அதில் மயக்கம் இல்லாமல் அடக்கம் இருந்தால்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
                        (நல்லவன்)

திரைப்படம்: யார் யம்புலிங்கம் (1972)
இசை: T.R பாப்பா
பாடியவர்: C.S ஜெயராமன்
எழுதியவர்: வாலி

கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...