' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஆத்தா உன் சேல

 



ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல

தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க ஆப்பனுக்கு தல தொவட்ட

பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்
நா செத்தாலும் யென்ன போத்தா வேணும் ஹோய்
செத்தாலும் யென்ன போத்தா வேணும்

ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல

ஆத்தா உன் சேல

ஆ ..இடுப்புல கட்டிக்கிட்டு
நீட்ச்சல் பழகியதும்
உன் சேலை தானே .. வண்ண பூன்சோலை தானே

வெறும்தரை விரிப்புல நான்
படுத்து கிடந்ததுவும்
உன் சேலை தானே.. வண்ண பூன்சோலை தானே

ஈர சேலை காயும் போது வானவில்லா தெரியும்
இத்துப்போன சேலையில் உன் சோக கதை புரியும்

காஞ்சி கொண்டு போகையில
சும்மாடா இருக்கும்…
நீ சேலை கட்டி இரட்ச
தண்ணி சக்கரையை இனிக்கும்

சேலை கட்டி இரட்ச தண்ணி
சக்கரையை இனிக்கும் …

ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல

ஆத்தா உன் சேல

அக்கா கட்டி பழகினதும்
ஆடு கட்டி மேட்ச்சதுவும்
உன் சேலை தானே வண்ண பூன்சோலை தானே

வெக்கையில விசிறியாகும்
வெயிலுக்குள்ள கொடையாகும்

உன் சேலை தானே வண்ண பூன்சோலை தானே

பொட்டிக்குள்ள மாடிடுச்சு
வைட்ச்ச அழகு முத்து மாலை

காயம் பட்ட விரல்களுக்கு
கட்டு போடும் சேலை
மயிலறிக உன் சேலை மனசுக்குள்ள விரியும்
வெளுத்த சேலை திரி விளக்க போட்ட எரியும்

வெளுத்த சேலை திரி விளக்க போட்ட எரியும்

ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல

தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க ஆப்பனுக்கு தல தொவட்ட

பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்

நா செத்தாலும் யென்ன போத்தா வேணும் ஹோய்

செத்தாலும் யென்ன போத்தா வேணும்

செத்தாலும் யென்ன போத்தா வேணும்

செத்தாலும் யென்ன போத்தா வேணும்

செத்தாலும் யென்ன போத்தா வேணும்

 


 திருவுடையான் என்பவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலராகவும், பொதுவுடமைக் கட்சியின் கொள்கை விளக்கப் பாடகராகவும் இருந்தவர். இவர் விருமாண்டி, மத யானைக் கூட்டம், மயில், களவாடிய பொழுதுகள் போன்ற திரைப்படங்களில் பாடியுள்ளார்.



இப்பாடல் பாடிய கரிசல் கருணாநிதி சாதி வெறியர்களால் கொல்லப்பட்டவர்.

 

 https://gumlet.assettype.com/vikatan%2F2020-03%2F1645e197-627e-4dae-8bbe-a93412a37a2b%2F_M7A0397.JPG?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0

 'ஒத்த சொல்லால', 'கம்பத்து பொண்ணு', 'கத்தரி பூவழகி' என கிராமத்து அழகியலை குதூகலத்தோடு இயல்பு மாறாமல் பாடல்களில் வார்த்தெடுப்பவர் பாடலாசிரியர் ஏகாதசி. சமீபத்தில், `சூரரைப் போற்று' படத்தில் வெளியான `மண்ணுருண்ட மேல' பாடலில் சாதி ஆதிக்கத்துக்கான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.

 

 

 

 

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...