' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

*PERSONAL SPACEPRIVACY*

 


பாஸ்கர் வெளியிலிருந்து வந்து வீட்டினுள் நுழைந்து கொண்டு இருந்தான் . இந்த US. குளிருக்கு. ஒரு காபி குடிக்கலாம் என் நினைத்தான் . ஆனால் மாலா யாரிடமோ ஃபோனில் கோபமாக பேசிக் கொண்டு இருந்தாள் .
*வாசலில் இருந்து கிச்சன் -ஐப் பார்த்தவன் அம்மாவிடம் சைகையில் என்ன என்று கேட்க , அம்மா நான் இல்லை என்று சைகையிலேயே சொன்னாள் ...*
அப்பாடா என்று இருந்தது பாஸ்கருக்கு... மாமியார் மருமகள் பிரச்சினை இல்லை. வேறு என்னவாக இருக்குமென்று யோசித்த, அவன் ,. SOFA. வில் அமரவும் , மாலா உள்ளே வந்து மொபைல் ஐ SOFA மேல் விட்டு எறியவும் சரியாக இருந்தது. புருவத்தை உயர்த்திப் பார்த்த அவனை ,. ஏன் வாயைத் திறந்து என்னன்னு கேட்க மாட்டீங்களா ன்னு சாடினாள்...
*ஏதாவது முக்கியமா இருந்தா நீயே சொல்லுவாயே அதான் வெயிட்டிங் என்றான்*. *அவளுடைய கண் கிச்சனுக்கு தாவியது...*
ஓ... அம்மா இருக்கா , அதனால சொல்ல யோசிக்கிறாள் போல , என்று நினைத்து அவன் ,அம்மா நீ போய் படுத்துக்கோ. போம்மா ... ஸ்ரீநாத் தூங்கிண்டு இருக்கான். பாரு ... என்றதும் அம்மா அவனைப் பார்த்து சிரித்து கொண்டே நகர்ந்தாள்.
*🌹🌹 சரி அம்மா போயிட்டா சொல்லு என்ன பிரச்சனை...*
*🌹🌹 எப்படி சொல்வது எனக்கு சொல்றதுக்கு வெக்கமா மட்டும் இல்லை கேவலமாகவும் இருக்குனு சொல்ல...*
*🌹🌹 அப்படி யாருட்ட பேசின...*
*🌹🌹 எங்க அம்மா விடம் என்று சொல்ல ... , அவன் நிமிர்ந்தான் ...*
*🌹🌹 இதோ பார் வாய்க்கு வந்தது பேசாதே என்ன சொன்னாங்க . கரெக்ட்டா சொல்லு ...*
*🌹🌹 உங்க அம்மா , ஊருக்கு போகனும் அதனால எங்க அம்மா அப்பாவை வர சொல்லி ஃபோன் பண்ணினேன்...*
*🌹🌹 சரி அதுக்கு நீ இந்த அளவுக்கு பீல் பண்ற மாதிரி என்ன சொன்னாங்க அதை முதல்ல சொல்லு...*
*🌹🌹 எங்க அம்மாக்கு எத்தனை வயசு தெரியுமா உங்களுக்கு...*
*ஒரு 68 இருக்கும்...*
*அப்பாவுக்கு...*
*74 இருக்கும்...*
*சரி விஷயத்துக்கு வா...*
*எனக்கு அசிங்கமா இருக்கு சொல்றதுக்கே....*
*அம்மாக்கும் அப்பாக்கும் இனிமே கொஞ்சம் PRIVACY வேணுமாம் PERSONAL SPACE வேணுமாம்...*
*🌹🌹 பேரன் பேத்தியுடன் சந்தோஷமா இருக்கனும் என்று யோசிக்கிற இந்த வயசான காலத்தில PERSONAL SPACE ம் PRIVACY ம் வேணும்னு அவங்க சொல்லறதை. , உங்ககிட்ட சொல்லறதுக்கே எனக்கு வெக்கமாவும் அசிங்கமாவும் இருக்கு ...*
*🌹🌹 சரி OK விடு . நான் NEXT WEEK உங்க அம்மாட்ட பேசுறேன் அதுவரை அமைதியாக இரு என்று சொன்ன அவன் தன் IN LAWS பற்றி யோசிக்க ஆரம்பித்தான் .
அருமையான
மனிதர்கள் என்னாச்சு??.... அடுத்தவாரம் பேசும் வரை வெயிட் பண்ணலாம் என்று முடிவு செய்தான்...*
*🌹🌹 அன்று SUNDAY மாலா வை அழைத்த அவன் இதோ பார் உங்க அம்மா அப்பாவுடன் பேசப் போறேன்.*
*நான் ஃபோன் ஐ ஸ்பீக்கர்ல போடறேன்... ஆனால் ஒரு கண்டிஷன் ஃபோன் SWITCH OFF செய்யும் வரை நீ எதுவும் பேசக்கூடாது என்று சொல்லி விட்டு பாஸ்கர் , மாலாவின் அம்மாக்கு. Call. செய்தான்...*
*🌹🌹 ஹலோ...*
*🌹🌹 ஹலோ மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க ... குழந்தை எப்படி இருக்கான் . மாலா எப்படி இருக்கா..மாலா என் மேல் கோபமா இருக்காளா மாப்பிள்ளை?? ...*
*🌹🌹 இல்லம்மா என்ன விஷயம் ஏன் அவளுக்கு கோபம்...*
*🌹🌹 இல்லை மாப்பிள்ளை என்னையும் அப்பாவையும் USA கிளம்பி வரச் சொன்னா , நான் இப்போ வரலேன்னு சொல்லி காரணத்தை சொன்னேன். , கோபத்துல ஃபோனை கட் பண்ணீட்டு போயிட்டா...*
*🌹🌹 நீங்க என் மாப்பிள்ளைங்கறதுக்கு மேலாக என் பிள்ளை மாதிரி அதுனால என் மனசுல உள்ளத உங்ககிட்டே சொல்லறேன் , தப்பு இருந்தால் மன்னிச்சுடுங்க...*
*🌹🌹 ஏன் பெ‌ரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்கம்மா...சொல்லுங்க...*
*🌹🌹 நான் கல்யாணம் ஆகி வரும்போது எனக்கு வயசு 21. உங்க. மாமாவுக்கு. இரண்டு தங்கைகள், மூளை வளர்ச்சி இல்லாத அவரைவிட இரண்டு வயசு குறைவான தம்பி... , மாமியார் மாமனார்....*
*🌹🌹 நானு‌ம் பாங்க்-ல வேலை பார்த்துண்டு இருந்தேன் இரண்டு நாத்தனார் கல்யாணம் அவர்கள் இருவருக்கும் இரண்டு இரண்டு குழந்தைகள் பிரசவம்...*
*🌹🌹 அதைவிட மூளை வளர்ச்சி இல்லாத மச்சினன் அவனுக்கு தேவையானது அனைத்தும் நான் தான் செய்ய வேன்டும் என்று பிடிவாதம் பிடிப்பவன்...*
*🌹🌹 மாமியார் மாமனார் இருவரும் வயசு ஆக ஆக அவர்களுக்கு எல்லாமே கையில் கொண்டு குடுக்க வே‌ண்டு‌ம்...*
*🌹🌹 இதற்கிடையில் எனக்கு இரண்டு பிரசவம் , குழந்தைகள் வளர்ப்பு பெரியவள் மாலாவின் கல்யாணம் சின்னவளின் படிப்பு. , அவளின் கல்யாணம் மாலாவுக்கு பிரசவம் சின்னவளுக்கு பிரசவம் , மாமியார் மாமனார் மச்சினன் இறப்பு னு....அ‌த்துட‌ன் இ‌ந்த விஷயங்கள் எல்லாம் செய்து முடிப்பதில் ஏற்பட்ட பணப் பிரச்சினை வேற....*
*🌹🌹 எ‌ன்னுடைய 47 வருட கல்யாண வாழ்க்கை போன ஆறு மாத‌ம் முன்னால் வரை இப்படிதான் நட‌ந்து முடி‌ந்தது...*
*🌹🌹 எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அவரோ அவருக்கு என்ன பிடிக்கும் என்பதை நானோ யோசிக்காமல் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்ததை எங்களுக்கு பிடித்ததாக ஏற்றுக் கொண்டு இத்தனை நாள் வாழ்ந்து இருக்கிறோம்...*
*🌹🌹 நானு‌ம் , என் கணவருக்கு என்ன பிடிக்கும் என்ன விரும்பி சாப்பிடுவார் என்று எதுவுமே யோசிக்காமல் மற்ற எல்லோரையும் நினைத்துத்தா‌ன் எல்லாம் செய்வேன்...*
*இந்த ஆறு மாதங்களாகத்தான் நாங்கள் நிறைய யோசிக்க ஆரம்பித்தோம்...*
*🌹🌹 இப்போது பண‌ம் என்பது எங்களுக்கு பிரச்சினை இல்லை . இருவரின் பென்ஷனால். தேவைக்கு அதிகமாகவே இருக்கு...*
*🌹🌹 இ‌ந்த ஆறு மாதத்தில் தா‌ன் நாங்கள் தனிக்குடித்தனமாக இருக்கோம்...*
*🌹🌹 காலையில் எழுந்திருக்கும் அப்பா பால் வாங்கி வந்தால் நான் அவரு‌க்கு பிடித்த மாதி‌ரி காப்பி போட்டு அருகில் இருந்து ஆத்தி குடுப்பேன்...நா‌ன் வீடு பெருக்கினால் அப்பா துடைப்பார்...நா‌ன் சமைக்க அவர் காய் நறுக்கி குடுப்பார்...*
*🌹🌹 ம‌திய‌ம் LUNCH சுட சுட இரண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பழைய கதையெல்லாம் ரசித்து பேசி சாப்பிடுவது வழக்கமானது...*
*🌹🌹 ஈவினிங் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு பிரசாதம்-லாம் சாப்பிட்டு கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து பேசி முடித்து ஆத்துக்கு வரும்போது 8 ம‌ணி ஆகிவிடும்...*
*🌹🌹 இரவில் ஒருவர் கையை ஒருவர் பிடி‌த்து‌க் கொண்டு தூங்கறோம்....*
*🌹🌹 ஏன்னா பயம் . நாளை விடியலில் யார் இருப்போம் என்ற உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை...*
*🌹🌹 இனி எத்தனை வருஷம் இருவரு‌ம் சேர்ந்து வாழ , விடப் போறார் அந்த கடவுள் எ‌ன்று தெரியவில்லை...*
*🌹🌹 அ‌தி‌ல் ஓரு நா‌ள் கூட இந்த சந்தோஷங்களை மிஸ் பண்ணிவிடக் கூடாது எ‌ன்று நினைக்கிறோம் ...*
*🌹🌹 இருபதுகளில் நாங்கள் வாழ்ந்திருக்க வேண்டிய இ‌ந்த ஆத்மார்த்த வாழ்க்கையைத்தான் நா‌ன் அவளிடம் PRIVACY, PERSONAL SPACE என்று சொன்னேன்...*
*🌹🌹 அவள் அதை வேறு விதமாக , அவள் வயசுக்கேற்ப கற்பனை செய்து கொண்டாள்...*
*🌹🌹 சத்தியமாக மாப்பிள்ளை இப்பதான் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பு‌ரி‌ந்து வாழும் வாழ்க்கையையே . வாழ ஆரம்பித்து இருக்கிறோம் . ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருக்கோம்...*
*🌹🌹 இது தப்பா மாப்பிள்ளை...*
*🌹🌹 அய்யோ நிச்சயமா தப்பு இல்லேம்மா. WISH YOU BOTH A HAPPY MARRIED LIFE மா....*
*🌹🌹 மாப்பிள்ளை ஃபோன் வச்சிடாதீங்க... உ‌ங்களு‌க்கு இப்போ நாங்கள் இல்லாமல் சமாளிக்க முடியாது என்றால் சொல்லுங்கள். , நிச்சயமாக கிளம்பி வருகிறோம்...மாலாவிடம் சொல்லுங்கள் , என்று சொல்லவும்...*
*🌹🌹 அம்மா எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க உங்க பொண்ணு கிட்ட பேசி நான் புரிய வைக்கிறேன் பை மா என்று சொல்லி ஃபோன் வைத்தான் பாஸ்கர் ...*
*🌹🌹 மாலாவின் கண்களில் இரு‌ந்து கண்ணீர் வழிந்தது...*
*🌹🌹 நான் தப்பு பண்ணி விட்டேன் கல்யாணம் பண்ணி 6 வருஷம் குழந்தை வேண்டாம் என்று இருந்தோம்...*
*🌹🌹 நீங்கள் அந்த 6 வருஷத்தில் எத்தனை COUNTRY என்னை கூப்பிட்டு போனீர்கள் எத்தனை சந்தோஷமாக இருந்தோம்...*
*🌹🌹 பாவம் அம்மா , அப்பா . அவர்கள் என் திருமணத்துக்கு முன் எங்குமே போனது இல்லை. இருவரும் சேர்ந்து உட்கார்ந்து பேசிக் கூட நான் பார்த்தது கிடையாது .அம்மா அவளுக்காக எதுவுமே செய்து கொள்ள வில்லை .எங்களிடமும் எதுவு‌ம் எதிர்பார்த்ததும் இல்லை...*
*🌹🌹 அவளிடம் தாய்மையை மட்டுமே எதிர்பார்த்த நா‌ன் அவளுக்குள் ஓரு பெண்மை இத்தனை வருடமாக ஏக்கத்தில் இருந்ததை புரிந்து கொள்ள வில்லை...*
*🌹🌹 கணவ‌ன் மனைவி PRIVACY, PERSONAL SPACE எல்லாவற்றையும் மூன்றாம் தரமாக கற்பனை செய்த என்னை , என்னாலேயே மன்னிக்க முடியல...*
*🌹🌹 PLEASE அம்மாக்கு ஃபோன் பண்ணுங்க என்றாள்...*
*🌹🌹 ஃபோன் எடுத்த அவள் , அம்மா என்னை மன்னிச்சுடுங்க. நான் உங்கள் மனதை காயப்படுத்தி விட்டேன். ரொம்ப சாரி அம்மா நீயும் அப்பாவும் சந்தோஷமாக இருக்கணும்...*
*🌹🌹 ஆனா உனக்கு எப்பவாவது , உங்க வாழ்க்கைல BORE அடிச்சதுன்னா ஓரு ஃபோன் பண்ணுங்க டிக்கெட் அனுப்பி விடறேன் . இங்க வாங்க உங்க பேரனுடன் சந்தோஷமா இருங்க...*
*🌹🌹 உங்களுக்கு NO MORE DISTURBANCE FROM OUR SIDE. MARRIED LIFE ல PERSONAL SPACE , PRIVACY ங்கரதுக்கு உ‌ண்மையான அர்த்தத்தை புரிந்துகொண்டேன்...*
*🌹🌹 HAPPY HAPPY MARRIED LIFE மா என்று PHONE வைத்த அவள் ஏங்க உங்க அம்மாக்கு டிக்கெட் எடுங்க மாமாவை வி‌ட்டு ஐந்து மாசமா அவங்களை பிரிச்சு இங்க வச்சு இருக்கோம் எனவும்...*
*🌹🌹 என். அம்மா ஒடி வ‌ந்து. மாலா. வின் கை பிடித்து தாங்க்ஸ் சொன்னாள்...*
*🌹🌹 மாமியார் கண்களிலும் அ‌ந்த ஏக்கத்தை பார்த்தாள் மாலா . இ‌னி த‌ங்க‌ள் சுயநலத்துக்காக பெரியவர்கள் யாரையும் பிரிப்பதும் இல்லை... அவ‌ர்க‌ள் தனிமைக்கு இடைஞ்சல் குடுக்கப் போவதுமில்லை எ‌ன்று முடிவு செ‌ய்து கொண்டாள்...*.
*ஆம். ,. இனி. PERSONAL SPACE ..... PRIVACY என்னும். வார்த்தைகள் அவர்களுக்கு,வேறு. அர்த்தம்.*
*இவர்களுக்கு வேறு அர்த்தம்*.....
 
Dedicated to all the sons and daughters in USA, UK, CANADA, AUSTRALIA, Etc.
 

 
பி.கு: இது இணையத்தில் பலரினால் பகிரப்பட்ட கதை. இதில் எழுதியவர் யார் எங்கு வெளியானது படத்தினை வரைந்த ஓவியர் என எந்த தகவலுமே குறிப்பிடப்படவில்லை.  இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்த கதை என்பதனால் இதில் பகிர்கிறேன். இது பற்றிய சரியான தகவல் தெரிந்தால் குறிப்பிடவும். இப்படைப்பாளிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
 

கருத்துகள் இல்லை

எழுதுவது எப்படி?

 எழுதுவது எப்படி?   எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்   புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட...