' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

A letter sent by a school principal before exams....

பரீட்சைக்கு முன், பாடசாலை அதிபர் ஒருவரால் பெற்றோருக்கு அனுப்பப்பட்ட கடிதம்.

‘அன்புள்ள பெற்றோரே!

உங்கள் பிள்ளைகளின் பரீட்சைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன. உங்கள் பிள்ளைகள் திறமையாக பரீட்சை எழுதவேண்டுமே என நீங்கள் தவிப்புடன் இருப்பீர்கள்.

தயவுசெய்து இதை நினைவில் கொள்ளுங்கள். பரீட்சை எழுதும் பிள்ளைகள் மத்தியில் ஒரு ஓவியர் இருக்கக்கூடும், இவர் கணிதபாடத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வரலாற்றையிட்டோ ஆங்கில இலக்கியத்தையிட்டோ அக்கறை கொள்ளாத ஒரு தொழிலதிபர் இருக்கலாம். இரசாயனப் பாடத்தில் பெறும் புள்ளிகள் தேவைப்படாத ஒரு இசைக் கஞைர் இருக்கக்கூடும். விளையாட்டுத் துறையில் திறமைகொண்ட ஒரு பிள்ளையின் சிறப்பான உடல் நிலை, பௌதீக பாடத்தைவிட முக்கியம்….. உங்கள் பிள்ளை அதிக புள்ளிகள் பெற்றால் பிரமாதம்!ஆனால் அவனோ அவளோ அதிக புள்ளிகள் பெறாவிடின் தயவுசெய்து அவர்களது தன்னம்பிக்கையையோ சுயமதிப்பையோ சிதைத்து விடாதீர்!

பரவாயில்லை! இது வெறும் பரீட்சைதான் என்று அவர்களுக்குக் கூறுங்கள். வாழ்வில் அரிய செயல்களை ஆக்குவதற்கென்றே அவர்கள் பிறந்தவர்கள் என அவர்களுக்குச் சொல்லுங்கள்!

புள்ளிகள் எப்படியிருந்தாலும், அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள் என்பதையும், அவர்களின் புள்ளிகைளைக் கொண்டு அவர்களை மதிப்பீடு செய்யமாடடோம் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்!’


 

கருத்துகள் இல்லை

எழுதுவது எப்படி?

 எழுதுவது எப்படி?   எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்   புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட...