' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பாலு மகேந்திரா நூலகம் மற்றும் கற்கை வள நிலையத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா

பாலு மகேந்திரா நூலகம் மற்றும் கற்கை வள நிலையத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா


பாலு மகேந்திரா நூலகம் மற்றும் கற்கை வள நிலையத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா நிகழ்வு 26.09.2021 அன்று மாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், பாலு மகேந்திரா நூலகத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி எம்மால் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியின் நடுவர்களான எழுத்தாளர் கோகிலா மகேந்திரன், எழுத்தாளர் சயந்தன் மற்றும் திரைப்பட விமர்சகர் ரதன் ரகு ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கான பரிசுத்தொகையும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இணையவாயிலாக நடைபெறவுள்ள இந்நிகழ்வினைத் தொகுத்து வழங்கவுள்ளார் பிரபல வானொலி ஒலிபரப்பாளர் எஸ்.கே.ராஜென்.

இந்நிகழ்வில், கலந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் வரவினை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

இவ்வண்ணம்,
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், 

பேருந்து தரிப்பிடச் சந்தி, 

கிளிநொச்சி

✉  balumahendralibrary.org[@]gmail.com
☎ + 94 212 282 108

📞 + 94 74 081 1240

கருத்துகள் இல்லை

Ray of Hope Documentary - Trailer

Lived and told by: Rathika Sitsabaiesan, MIR, ADR, Prosci, Ziglar Coach Sutha Shanmugarajah Collin Collin Directors/Writers: Ryan Singh , ...