' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஆப்பிரஹாம் லிங்கன் அவரது மகனின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

 

ஆப்பிரஹாம் லிங்கன் அவரது மகனின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம்


மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

எல்லா மனிதர்களும் நேர்மையானவர்கள் இல்லை, எல்லா மனிதர்களும் உண்மையானவர்களும் இல்லை என்பதை எனது மகன் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் தான். ஆனால், ஒவ்வொரு போக்கிரிக்கும், அதைச் சமன் செய்ய ஒரு தலைவனும் இருப்பான் என்பதையும் அவனுக்குக் கற்றுக்கொடுக்கவும்.

அதே போல் ஒவ்வொரு தன்னலமுள்ள அரசியல்வாதி இருக்கும் போது, தியாக சீலமுள்ள ஒரு தலைவனும் இருப்பான் என்பதையும், ஒவ்வொரு விரோதி இருக்கும் போது, ஒரு நண்பனும் உண்டு என்பதையும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும்.

இவைகளைக் கற்பிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என்பதை நான் அறிவேன். ஒரு டாலர் சம்பாதிப்பது ஐந்து டாலர் உழைக்காமல் கிடைப்பதை விட மிகவும் மதிப்புள்ளது என்பதை நீங்கள் என் மகனுக்கு முடிந்தால் கற்றுக் கொடுக்கவும்.

தோற்பதைப் பற்றி அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் அதே வேளையில், வெற்றியில் மகிழ்ச்சி அடைவதைப் பற்றியும் கற்றுக் கொடுக்கவும்.

உங்களால் முடிந்தால், பொறாமையிலிருந்து அவன் விலகி இருக்கச் செய்ய கற்றுக் கொடுக்கவும்.

மெளனமாகச் சிரிக்கும் ரகசியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும். போக்கிரி ஆசாமிகளைச் சுலபமாக முன்னதாகவே இனம் கண்டு கொள்ளும் திறனை அவன் கற்றுக் கொள்ளட்டும்.

புத்தகங்களின் அதிசயத்தைப் பற்றி நீங்கள் முடிந்தால் அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும். ஆனால் அதே சமயத்தில், ஆகாயத்தில் பறக்கும் பறவைகளின் எல்லையில்லா ஆச்சரியமான புதிரைப் பற்றியும், சூரிய ஒளியில் சுடர்விடும் தேனீக்களைப் பற்றியும், பச்சை வர்ண குன்றின் பூக்களைப் பற்றியும் சிந்தித்து அமைதியாக பொழுதைப் போக்கும் அனுபவத்தை அவனுக்கு அளிக்கவும்.

ஏமாற்றுவதை விட தோல்வி அடைவது எவ்வளவோ மேல் என்பதை பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும்.

ஒவ்வொருவரும் ஒட்டுமொத்தமாக அவன் கொண்டுள்ள கருத்துக்கள் தவறு என்று சொன்னாலும், அந்த அவனுடைய சொந்தக் கருத்துக்களில் அசையாத நம்பிக்கை வைப்பதைப் பற்றி அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரடானவர்களிடம் முரடாகவும் இருப்பதற்கு அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும்.

அனைவரும் மந்தையாக ஒரே பாதையில் செல்லும் கூட்டத்துடன் சேர்ந்து பின்பற்றிச் செல்லாமல் இருக்கும் சக்தியை என் மகனுக்கு அளிக்க முயலவும்.

எல்லா மனிதர்களின் பேச்சுக்களையும் காதுகொடுத்துக் கேட்க அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும். ஆனால், அவன் கேட்ட அனைத்தையும் உண்மைத் திரையில் வடிகட்டி, அதிலிருந்து வெளியே வரும் உண்மையை மட்டும் எடுத்துக் கொள்ளவும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும்.

கவலையாக அவன் இருக்கும் போது, சிரித்துக் கொண்டு எப்படி இருக்க முடியும் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும். குற்றம் சொல்பவர்களின் ஏளனமான பேச்சுக்களை உதாசீனம் செய்யவும், அதிகமாக புகழப்படும் இனிய மொழிகளில் மயங்காமலும் இருக்க அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும்.

அவனது சக்தியையும், அறிவையும் உயர்ந்த விலை கேட்பவர்களுக்கு விற்க கற்றுக் கொடுக்கவும். ஆனால், அவனது மனது - ஆத்மாவிற்கு ஒரு போதும் ஒரு விலைப்பட்டியை ஒட்ட அவனை அனுமதிக்க வேண்டாம்.

கூச்சலிடும் கூட்டத்திற்குச் செவி சாய்க்கவேண்டாம் என்பதையும், தனக்குச் சரி என்று நினைத்ததைச் செயலாற்ற உறுதியாக நின்று அதற்காகப் போராடவும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும்.  

அவனுக்கு அன்பாக கற்றுக் கொடுக்கவும். ஆனால், அதே சமயத்தில், அவனை ஆரத்தழுவும் அளவில் அதீத அன்பு காட்ட வேண்டாம். ஏனென்றால், தீயில் காய்ச்சிய இரும்பு தான், உறுதியான எஃகாக உருவாகிறது.

பொறுமை இழக்கும் துணிவை அவன் பெறும் அதே சமயத்தில், வீரம் காட்டுவதில் பொறுமையாக அவன் இருக்க வேண்டும். உன்னதமான தன்னம்பிக்கையை எப்போதும் அவன் கொண்டிருக்க அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும். ஏனென்றால், அதன் பிறகு  அவனுக்கு மனித இனத்தின் மேல் அந்த நம்பிக்கை எப்போதும் இருக்கும்.

இது மிகவும் கடினமான கட்டளையாகும். ஆனால், நீங்கள் உங்களால் முடிந்த மட்டும் முயன்று பாருங்கள். அவன் மிகச் சிறந்த சிறு பையன் - என் மகன்.

அப்பிரஹாம் லிங்கன்.

மின் வலை ஆதாரம்http://www.citehr.com/48490-values-abraham-lincolns-letter-his-sons-teacher.html#ixzz25TzNsdvfகருத்துகள் இல்லை

எழுதுவது எப்படி?

 எழுதுவது எப்படி?   எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்   புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட...